Saturday, October 10, 2015

mr and mrs iyer விபத்து போல வந்த உறவு பிரிந்தே போகவேண்டிய நியதி.......ஆனாலும்....

mr and mrs iyer  மிஸ்டர் அண்ட் மிசிஸ் அய்யர் என்ற படம் மனித உணர்வுகளை அதிகமாகவே கிளறி பார்த்துவிட்ட ஒரு திரைப்படமாகும்.
கையில் குழந்தையுடன் ரயிலில் ஒரு பெண்.
அறிமுகமே இல்லாத ஒரு ஆண்.
ரயில் போகும் பாதையில்  ஒரு யுத்தம்.
அதன் உஷ்ணம் இருவரையும் எங்கோ தள்ளி விடுகிறது,
தவிர்க்கவே முடியாத விதியின் சூறாவளியில் இருவரும்.
வருஷக்கணக்கில் நடக்கவேண்டிய விடயங்கள் ஓரிரு நாட்களிலேயே நடந்து விடுகிறது, எந்த இடத்தில் எவர் எவரில் தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலை உருவாகியது
என்று கண்டு பிடிக்க முடித்த வேகத்தில் விதி முடிச்சு போட்டு விடுகிறது.
ஒரு பக்கம் பயங்கரத்தின் எல்லையே கண்டுவிட்ட திகில்.
வாழ்வின் இறுதி என்பதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்ப்பவர் எவரும் நிச்சயம் கதி கலங்கிதான் போவார்கள். இதற்கு மீனாட்சியும் ஸௌத்திரியும்(முஸ்லிம்) விதிவிலக்கா என்ன?
பாரம்பரிய கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தஆசார மீனாட்சியின் தலை எழுத்து சுதந்திர முற்போக்கு சிந்தனையுள்ள ஸௌத்திரியுடன்  வேறு வழியே இல்லாமல் சங்காத்தம் வைக்கவேண்டிய சூழ்நிலை.
பயந்து பயந்து அவனை தனது கணவன் என்று பொய்சொல்லி காப்பற்றவேண்டிய கட்டாயம்.
கண்முன்னே கொடூரத்தை பார்த்து நடுங்கிப்போன மீனாட்சிக்கு ஸௌத்திரியின் நெருக்கம் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு.
இவற்றை எல்லாம் ஏதோ இருவரின் சொந்த வாழ்க்கையை பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

ஒருவர் ஒரு கதா பாத்திரத்திரமாகவே மாறி அதை வாழ்ந்து காட்டுவது என்பது திரையில் அபூர்வமாகதான் காணமுடியும்,

அற்புத நடிகர்களின் திறைமைக்கு சரியான களம் அமைத்து கொடுக்க கூடிய கதை அதை சரியாக கையாள கூடிய திறமை உள்ள கதாசிரியர் வசன கர்த்தா இயக்குனர் எல்லாம் ஒரு உன்னத ஸ்தானத்தில் இத்திரைப்படத்தில் அமைந்து இருக்கிறது.
ஒரு கட்டத்தில் மீனாட்சியும் ஸௌத்திரியும் ஒரு கணவன் மனைவி அல்லது காதலர்கள் போல பார்பவர்கள் தங்களை அறியாமலேயே என்ன தொடங்கி விடுவார்கள்.
ஆனால் எந்த காட்சியிலும் சரி வசனத்திலும் சரி அப்படி ஒன்றுமே ரொமான்டிக்காக காட்டப்படவே இல்லை.
மாறாக உண்மையான வாழ்க்கை என்றால் அதில் துன்பம் சோதனை கோபம் வெறுப்பு பின்பு சமாதானம் ஆறுதல் போன்ற உணர்வுகள்தான் அலைமோதும.
 இதில் அப்படித்தான் காட்டப்படுகிறது, இந்த யதார்த்தமே ஒரு கட்டத்தில் அவர்களை மிகவும் நெருக்கம் கொள்ள செய்து விடுகிறது,

அவர்களின் இந்த நெருக்கம் சரியா தவறா என்பது அல்ல பிரச்சனை அது அந்த கதா பாத்திரங்களின் பிரச்சனையாகும்.
ஒரு திரைப்படத்தின் அழகு அல்லது இலக்கணம் என்ற ரீதியில் இந்த கத்தி மேல் நடக்கும் சமாசாரத்தை அழகாக மிகவும் அற்புதமாக காட்டி உள்ளார்கள்
அவர்கள் பிரியும் பொழுது அவர்களின் கண்களில் கண்ணீரை காட்ட முடியாத சூழ்நிலை.
ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் தன்கணவன் என்று கூறி கொலைக்களத்தில் இருந்து தான் காப்பாற்றி கொண்டு வந்த ஸௌத்திரி.
இல்லாத ஊருக்கு போகும் வழி என்று அறிந்தே இருவரும்  மனதை பரஸ்பரம் பறிகொடுத்து பின்பு  பிரியும் சோகம் இதுவரை இந்திய சினிமா காணாதது.

அந்த இருநாட்களில் வாழ்வின் பார்க்க கூடாத பக்கங்களை எல்லாம் பார்த்த அதிர்ச்சி, அந்த அதிர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட்டு கரை ஒதுங்கிய இரு மீன்கள்.......Mr and Mrs Iyyar