Tuesday, December 29, 2015

His Highness Abdulla ஒரு அனந்தன் நம்பூதிரி பிராமணன் எப்படி ஒரு அப்துல்லாவாக முடியும்....


His Highness Abdulla ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ..தொண்ணுறுகளில் வெளியாகிய மிக நல்ல மலையாள திரைப்படம்.
வாரிசு இல்லாத ஒரு  அரசுகுடும்ப  தலைவரை(நெடு முடி வேணு )  கொன்று
அவரது சொத்துக்களை  பங்கு போடதுடிக்கும்   உறவினர்கள் ஒரு வாடகை  கொலையாளியை மும்பையில்  இருந்து  வரவழைக்கின்றனர்,
இங்கேதான் பெரிய தவறு நடந்து விட்டது. வந்தவன்  ஒரு கொலையாளியே அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தேவை கருதி  கொலை தொழிலுக்கு புதிதாக வந்துவிட்ட ஒரு மென்மையான இசைகலைஞன் அவன், அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்த அவனின் உண்மயான பெயர் அப்துல்லா என்பதாகும்
அவனால் வாக்குறுதி அளித்த படி அரசரை கொல்ல முடியவில்லை.
சங்கீத பிரியரான  அரசர்  இவனின் சங்கீதத்தில் மயங்கி விட்டார்,
கொல்லவந்தவன் உறவினர்களிடம் பேசி அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான் .
அவர்கள் தற்போது தாங்களே அரசரை கொன்று விட்டு பழியை கூலிக்கு வந்த கொலைகாரன் அனந்தன் நம்பூதிரி  மீது பழியை போட தீர்மானித்தனர்,
கொல்லவந்த  அனந்தன் நம்பூதிரி வீட்டை விட்டு ஓடினால் அரசரை உறவினர்களே கொன்றுவிட்டு சுலபமாக பழியை அனந்தன் நம்பூதிரி  மீது போட்டு விடமுடியும்,
கொஞ்ச நாள் பழக்கத்தில் அரசர் மீது நெருங்கி பழகியதால் அரசரை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அனந்தன் நம்பூதிரி  நிலை பெரும் கேள்வி குறியாகிவிட்டது .
இதற்கிடையில் அரசருக்கோ அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்தவனின் உண்மை பெயர் அப்துல்லா  என்றும் அவன் தன்னை கொலைசெய்வதற்கு வந்த கொலையாளிதான் என்று அறிந்து  அதிர்ந்து போகிறார்,

கதை என்னவோ  மர்ம நாவல் போல் தெரிந்தாலும் உண்மையில் இது ஒரு சங்கீத பெருமை பேசும் படம்தான்,
பிராமண அரசருக்கும் ஒரு கொலையாளி அப்துல்லாவுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒருபுறம் ,  அப்துல்லாவிடம் மனதை
பறிகொடுத்த அரசரின்  வளர்ப்பு புத்திரி ராதை இதுவரை  உரக்க அழுது கூட யாரும் கண்டதில்லை அவ்வளவுக்கு மென்மையான பெண்.
இந்த அப்பாவி அனாதையின் மனதை கவர்ந்தவன்  கூலிக்கு கொலைசெய்யும் அப்துல்லா என்று அறிந்ததும் அவர்கள் இருவருமே நொறுங்கி போய்விடுகிறார்கள்.
இந்த படத்தில் வரும் பாடல்கள் எத்தனை தரம் கேட்டாலும் சலிக்கவே சலிக்காது . காலம்சென்ற இசைமேதை  ரவீந்திரன் அவர்கள் யாருமே தொட முடியாத உச்ச சங்கீதத்தை வழங்கி உள்ளார், ஐந்து பாடல்கள் அத்தனையும் என்னால் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாத அளவு  அற்புதம்...கர்நாடக சங்கீத ராகங்களை அள்ளி அள்ளி ஜனரஞ்சமாக வீசி உள்ளார், ஒரு இந்துஸ்தானி கவாலி சங்கீத பாடலும் உண்டு,
மேடை கச்சேரிகளில் எந்த பாடகரும் பாட பயப்படும் பாடல்களாக இந்த படத்தின் பாடகள் அத்தனையும் இருக்கிறது ,
இது இசையமைப்பாளர் ரவீந்திரனின் தனி திறமை .இவர் தமிழில் ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் . அதில் வரும் ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் என்ற பாடலும் மேடைகளில் யாரும் இலகுவில் பாட துணியாத ஒரு பாடலாகும்,
இந்த படத்தை பாராதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள் என்றுதான் நான் சொல்வேன் . அவ்வளவு தூரம் இது ஒரு அழகான Feel good movie யாகும் ,
எந்த மொழியிலும் நிச்சயம் மொழிமாற்றம் செய்ய முடியாத ஒரு படமாகும்,
மலையாள மொழியின் கவித்துவம் இதன் பாடகளில் மட்டும் அல்லாமல் வசனங்களிலும் அங்கெங்கே காணலாம்.
ஏராளமான கதா பாத்திரங்கள்  இந்த படத்தில் இருந்தாலும்  அத்தனை  பேர்களும் ஞாபகத்தில்  இருப்பது இதன் பாத்திரப் படைப்புக்களின்  தனிச்சிறப்பு.
கதையில் அங்கங்கே ஏற்படும் முடிச்சுகள் மனித மனதின் பேராசை அது எவ்வளவுதூரம் நல்ல மனிதர்களையும்  கொடியர்வகளாக மாற்றிவிடும் என்பதை  தத்ரூபமாக காட்டுகிறது,
மனித மனதின் மென்மையான பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் இந்த படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது,
இந்த படத்தின் வெற்றிக்கு பின்பு இதை காப்பி அடித்து பல படங்கள் வந்தன ஆனால் ஒன்றுமே இதன் கால் தூசிக்கு கூட நிகராகவில்லை.
திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படங்களின் வரிசையில் கம்பீரமாக இது இடம் பெற்றுவிட்டது,